மக்களின் மேல் அரசாங்கத்திற்கு இத்தனை மனிதாபிமானமா?
(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்காக சொந்த பிரதேசங்களை நோக்கி செல்லும் மக்களின் நலன் கருதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடரூந்து திணைக்களம் ஆகியன விஷேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து நேற்றிரவு முதல் தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் இடம்பெற்று வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எச்.ஹேமசந்ர தெரிவித்துள்ளார். வழமையாக சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகளுக்கு மேலதிகமாக 200 பேரூந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்….