அரசியல் உரிமை போராட்டத்துடன் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதும் அவசியமாகிறது மு சந்திரகுமார்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக உழைப்பதைப் போன்று மக்களின் அன்றாட தேவைகளையும் நிறைவு செய்வதற்காக உழைப்பதும் மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிகளின் அவசியமான கடப்பாடாகும்’ என முன்னாள் பாரளமன்ற உறுப்பினரும்இ சமத்துவ சமூக நீதி மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான  மு சந்திரகுமார் தெரிவித்தார்.

வட்டக்கச்சி  மாயவனூர்  இராமநாதபுரம் ஆகிய பிரதேச கிராம மக்களுடனான சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் வாழ்வின் சுமைகளையும் அவர்கள் முகம் கொடுக்க முடியாது திணறுகிறார்கள். ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரிசியின் விலையை எண்பது ரூபாவாக பிரகடனப்படுத்தியுள்ள போதும்  இன்றும் கடைகளில் அரிசி நூற்றி பத்து ரூபாவாக விற்கப்படுகின்றது. இதனை சட்டம் மூலம் தடுப்பதற்கு முடியாதுள்ளது. இதனைப் போன்று தான் எல்லா பொருட்கள்  சேவைகளினதும் நிலமையும் காணப்படுகின்றது. நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

கிளிநொச்சியில் ஆடைத்  தொழிற்சாலை ஒன்று இயங்குகிறது. உழைப்புச் சுரண்டல் தொழிலாளர் நலன்கள் பேணப்படாதது போன்ற பலவித குறைபாடுகள் இருந்தாலும் இன்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். யுத்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்ள இவ்வாறான பல முதலீடுகள் இன்று அவசியமாகிறது. எனவே இவ்வாறான முதலீடுகளிற்கு புலம்பெயர்ந்த சமூகங்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முன்னிலைப் படுத்தி முன்வரவேண்டும்.

மாயவனூர் கிராம மக்கள் புழுதியாற்று ஏற்று நீர்ப்பாசன மூலம் தமது வாழ்வாதாரம் அதிகமாக மேம்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் வரட்சி உள்ளூர் மக்களின் ஆலோசனை  சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறையின்மை நிபுணத்துவ ஆலோசனை போன்ற விடயங்களுடன் விரையமற்ற நீர் முகாமைத்துவம்இ மக்களுக்கு கட்டுபடியான ஆகு செலவு என்பன கருத்தில் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் போது மட்டுமே இவை மக்களுக்கு பயனுள்ளவையாக அமையும். மிகவும் வளமுடைய மாயவனூர் மண்ணில் சொந்த வாழ்வாதாரத்தை மக்கள் மேம்படுத்த முடியும்.

இதே போன்று பாரதிபுரம்  கிருஷ்னபுரம் பகுதிகளிலும் விவசாயத்துக்கு நீர் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்படின் மிகப் பெரிய பெறுமதியான பணப் பயிரான கறுவா செய்கை மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

கடின உழைப்புக்கு தயரான மக்கள் உள்ள எமது மாவட்டத்தில் மக்களின் தேவைகள் வழங்கப்படுவதற்கான அரசியல் தலமைகள் அவசியமாகின்றன. அரசியல் உரிமை போராட்டத்துடன்இ மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதும் அவசியமாகின்றது. இது மக்கள் பிரதிநிதிகளின் கடமையுமாகும்.

வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற இடர்களின் போது மக்களுக்குரிய நிவாரணம் பெற்றுக் கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையும் பொறுப்புமாகும்.

இணக்க அரசியல் என்பது சரணடைதல் என முன்பு பலர் குறிப்பிட்டு இருந்தனர். எதிர்பு அரசியலை விட இணக்க அரசியல் என்பது மிகவும் கடினமானது.பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசிற்குள்ளேயே முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக நான் பல்வேறு நெருக்கடிகளையும்இ அச்சுறத்தல்களையும்  அவமானப்படுத்தல்களையும் சந்தித்துள்ளேன். மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நீண்ட காலங்கள் எடுத்தன.ஆயினும் மக்களின் நலன்களுக்காக இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு இறுதி வரை போராடினேன்.இதனால் மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய முடிந்தது. என்னிடம் தெளிவான இலக்கும்இ கிளிநொச்சி மாவட்ட மேம்பாடு பற்றிய கனவும் உள்ளன. அவற்றை நிறைவு செய்வதற்காக எப்போதும் உழைப்பேன்.

சமத்துவமும்  சமூக நீதியுமுடைய பலமான தமிழ்த் தேசிய உருவாக்கத்திற்கான அடித்தளமுடைய அரசியல் நிலைப் பாட்டில் நின்று பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக உழைப்பேன். எனவும் அவர் தமது உரையில் தெரிவித்திருந்தார்.

கதிரவேலு கெங்காதரன் தலமையில் நடைபெற்ற இம் மக்கள் சந்திப்பில் சமத்துவ சமூக நீதிகான மக்கள் அமைப்பு செயற்பாட்டாளருமான அன்ரன் அன்பழகனும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.

எஸ்.என்.நிபோஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *