மஹிந்தவின் சாரதிக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியான கெப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த பீரிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான, கடுவலை பிரதேசத்தில் உள்ள காணியில் சட்டவிரோதமான முறையில் கல் குவாரியை நடத்திச் சென்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிணை மனுவை நிராகரித்த கொழும்பு மேலதி நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும்…

Read More

விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு

(UDHAYAM, COLOMBO) – அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில புத்தகங்கள் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக வைத்தியர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டார். இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள காகிதங்கள் ITI என்ற தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் சிபார்சுக்கு பின்னரே காகிதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று…

Read More

ஹட்டன் சமனலகமவில் மண்சரிவு அபாயம் 12 குடும்பங்களை வெளியேர உத்தரவு ..பிரதேசவாசிகள் வெளியேர மறுப்பு

(UDHAYAM, COLOMBO) – பாரிய மண்சரிவு காரணமாக ஹட்டன் சமனலகம பிரதேச த்தில் வசிக்கும் 12 குடும்பங்களை  சேர்ந்தவர்களை வீடுகளிலிருந்து வெளியேரி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஹட்டன் பொலிஸார் அறிவுருத்தல் விடுத்தபோதும் அப்பிரதேச மக்கள் அக்கோரிக்கையை நிராகரித்துள்ளனர் ஹட்டன் சமனலகம பிரதேசமானது மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தேசிய கட்டட அராய்ச்சி நிறுவகம் எதிர்வு கூறியுள்ளது 24 மணி நேரத்திற்குள் அப் பிரதேசத்தில்   125 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யுமாயின் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேருமாறு பி.பதேசவாசிகளுக்கு அறிவுருத்தல்…

Read More

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் பல இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு முகவரான எட்வேட் ஸ்னோவ்டன் 2013 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பிச்சென்று ஹொங்கொங்கில் அடைக்கலம் பெற்றார். இதன்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகள் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை மற்றும் பிலிபபைன்ஸ் அகதிகளின் அகதி…

Read More

சீனாவின் நீர்மூழ்கி கப்பலை இலங்கையில் நங்கூரமிட மறுப்பு?

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நங்கூரமிடச் செய்வதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உயர்மட்டத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி இலங்கையில் ஒரு மாத காலத்துக்கு தமது நீர்மூழ்கி கப்பலை நங்கூரமிடச் செய்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. ஆனால் இதற்கான கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஒக்டோர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில்…

Read More