இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பல இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு முகவரான எட்வேட் ஸ்னோவ்டன் 2013 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பிச்சென்று ஹொங்கொங்கில் அடைக்கலம் பெற்றார்.

இதன்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகள் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை மற்றும் பிலிபபைன்ஸ் அகதிகளின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

இதனை கண்டித்துள்ள ஸ்னோவ்டன், குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு ஹொங்கொங் அரசாங்கமே பதில் கூறவேண்டியேற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *