வெள்ளவத்தை கட்டிட அனர்த்தம்: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற ஐந்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, தரம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெஹிவளை பிரதேச செயலாளர் நளினி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை சார்லிமன் வீதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து வீழந்த அனர்த்தத்தில் ஒருவர் பலியானார்.

மேலும், 21 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *