அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்

(UTV|COLOMBO)  நாட்டில் அடிக்கடி தொடர்ந்து வரும் இனக்கலவரங்களால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது அதனால் முஸ்லிம்கள் இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் இந்த நிலை இனிமேலும் தொடரக் கூடாது சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்குடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தனது அரசியலை செய்து சகல இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து வருகின்றார் அதனால் மக்கள் அல்ல அரசியல் காழ்ப்புணர்சி கொண்டவர்கள் அவர் மீது ஆதாரம் அற்ற பொய் குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து முன்னாள் அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு கலங்கம் ஏற்படுத்த இனவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர் அவர்களின் கருத்து என்பது அமைச்சர் மீது தனிப்பட்ட முறையில் கோபம் கொண்டவர்கள் பழி தீர்க்கும் பிரச்சாரப்பணி என்பது நாட்டு மக்களுக்கு தற்போது புரிந்து வருகின்றது

கடந்த காலங்களில் இனவாதிகளால் நடத்தப்பட்ட கலவரங்களின் போது அமைச்சர் றிசாத் அவர்கள் தனது உயிரை கூட மதிக்காமல் நேர காலம் பார்க்காமல் உரிய இடங்களுக்கு சென்று அமைதியை ஏற்படுத்தினார் இதனால் சிங்கள மக்கள் அமைச்சர் றிசாத் பதியுதின் அவர்களின் நேர்மையான செயல்பாடுகளை நாட்டு மக்கள் பேசும் நிலை உருவாகியுள்ளது

கடந்த 30 வருட கால யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வட மாகாண மக்கள் என்பது நாம் அறிவோம் அந்த மக்களின் #மீனிக் #பாம் அவல நிலையை கண்டறிந்த அமைச்சர் மிகவும் துணிவுடன் தனது நேரடி பார்வையில் கண் கணித்து அந்த மக்களுக்கு எந்த அரசியல்வாதியும் செய்யாத அரசியலுக்கு அப்பால் மனித நேய உதவிகளை செய்து அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கு உதவினார் அந்த உதவியை இன்று மக்கள் மறக்காமல் பேசுவம் வட மாகாணத்தில் உள்ள சில அரசியல்வாதிகளுக்கு மக்களிடையே சென்று வாக்கு கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அகதி மக்களின் வாழ்க்கையை சீராக்க மீள்குடியேற்ற அமைச்சுக்கு பொறுத்தமானவர் றிசாத் பதியுதீன் என்று அரசாங்கம் அடையாளம் கண்ட ஒரு செயல் வீரன் தனது கடமைகளை சரி வர செய்துள்ளார்

அடுத்து அபிவிருத்தி என்ற வகையில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஜாதி பேதமின்றி சகல இனங்களிலும் வறுமையால் வாழும் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற போதுமான வாழ்வாதார உதவிகளை செய்துள்ளார் அதனால் இன்று பல வரிய குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டு அமைச்சர் றிசாத் அவர்களுக்கு பிராத்தனை செய்கின்றனர்

அதுமட்டுமல் அமைச்சரின் நிதியுதவியால் பௌத்த விகாரைகள் கோயில்கள் பள்ளிவாசள்கல் கிறிஸ்தவ ஆலயங்கல் என்று வணக்கஸ்தானங்கள் கூட அதிகமாக பூனரமைப்பு செய்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் இதுவரை பதவி வகித்த அமைச்சுக்களில் அதிகமாக மாற்றுமதத்தினருக்கே தொழில் வாய்ப்புகள் அதிகமாக வழங்கியுள்ளார் அதனால் படித்த சமூக இன்று அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்

நாட்டின் பொருளாதார நிலமையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு உதவிகளை பெற்று வந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து எந்த அரசியல்வாதியும் செய்யாத உதவியை செய்து வருகின்றார் அதனால் நாட்டு மக்கள் அமைச்சர் றிசாத் அவர்களின் சேவையை பாராட்டி பேசுவது இனவாதிகளுக்கு பிரச்சினையாக இருக்கின்றது அதனால்தான் அமைச்சரை ஊழல்வாதி என்று கூறுகின்றனர் அவர்களுக்கு உழைப்பவன் உண்ணுவது குற்றமாக தெரிகிறது

இன்று அமைச்சர் றிசாத் அவர்களை குற்றவாளியாக கூறுபவர்கள் அவர்கள் சுத்தவாளியா என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும் அப்படி அவர்களால் முடியுமா ?

இன்றை அரசியல் சூழ்நிலையில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அரசியல் வளர்ச்சி என்பது யாரும் எதிர்பார்க்காத ஒரு வளர்ச்சி அதனால் ஆட்சியின் நாயகனாக அவர் இருப்பதால் ஆட்சியாளர்களுக்கு அமைச்சர் அவர்களின் உதவி கட்டாயம் தேவைப்படுகிறது அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் பிரதமர் பதவியை பாதுகாக்க பல அரசியல்வாதிகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அரசியல் உதவியை நாடிய போது சட்டவிரோத ஆட்சிக்கு உதவி புரிய மறுத்ததால் அமைச்சர் றிசாத் மீது பல குற்றச்சாட்டுக்களை வங்குரோத்து அரசியல்வாதிகள் இனவாதிகள் ஒன்று சேர்ந்து சுமத்தி வருகின்றனர் அவர்கள் கூறும் குற்றச்சாட்டை மறுக்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் எந்த விராசனைக்கும் முகம் கொடுத்து தான் நிரபராதி என்று மக்களுக்கு புரிய வைக்க தனது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் என்பது போல் அரசியல் அதிகாரம் கொண்டு இனவாதம் பேசுபவர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் நிரபராதி என்பதை இறைவன் புரிய வைக்கும் காலத்தை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஜெமீல் அகமட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *