மலையகத்தில் கடும் காற்று

(UDHAYAM, COLOMBO) – மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் இன்று காலைமுதல் கடுங்காற்று வீசி வருவதுடன் பனிமூட்டம் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கடும் காற்று காரணமாக மின்சார விநியோகத்திலும் இடைக்கிடை தடங்கல் ஏற்பட்டுள்ளது.

Read More

‘மோரா’ புயல் – மலையகத்தில் கடும் மழை

(UDHAYAM, COLOMBO) – வங்காள விரிகுடாவில் நிலவிய குநை;த தாழமுக்கம் ‘மோரா’ புயல் வங்காள நாட்டை நோக்கி நகர்வதால் மழை அதிகரிப்பதுடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலையில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கமுடியும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு பிரதேசத்தில் 100 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டை சுற்றிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்வு…

Read More

மலையகத்தில் பல்கலைக்கழக கல்லூரி அமைக்க இந்தியாவின் உதவி – கல்வி இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது மலையக கல்வி அபிவிருத்தி , வீடமைப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஹற்றன் டிக்கோயாவில் இடம்பெறும் ஆதார வைத்தியசாலை புதிய கட்டிடதொகுதி திறப்பு வைபவ நிகழ்வின்போது இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே கல்வி…

Read More

மலையகத்தில் மோடி

(UDHAYAM, BOLLYWOOD) – ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருந்தோட்டப் பகுதி மக்களையும் சந்திக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்னர் தெரிவித்தார். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போதே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின்…

Read More