25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – சமீபத்திய இயற்கை அனர்த்தத்தினால் சுமார் 25 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கியக் தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பொருத்தமற்ற கட்டடங்கள் அகற்றப்பட்டு புதியகட்டங்கள் அமைக்கப்படும். இது தொடர்பாக அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டடத்தின் நிலைமையை பரிசோதனை செய்வதற்காக பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அந்த பிரதேசங்களிற்கு அனுப்பிவைக்கபட்டு…

Read More

கிளிவெட்டி மாஹா வித்தியாலயத்திற்கு முன்பாக பாலியல் துன்புருத்தல்களுக்கு எதிராக மாணவர்கள் கண்டன ஆர்பாட்டம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசலை மாணவிகள் மூவர் இரு இளைஞர்களினால் பாலியல் துன்புருத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும் அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாணவிகள் மூவரையும் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குற்றவாளிகளை கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தக்கோரியும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் கிளிவெட்டி மஹாவித்தியாலய…

Read More

கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ் வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – அட்டன் கொட்டகலை தமிழ் வித்தியாலயம் மற்றும் அட்டன் ஹைலன்ஸ்   வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சற்தித்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. தமது கோரிகள் சிலவற்றை  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நிறைவேற்றி வைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதற்கும் நிலவும் மேலும் சில குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Read More

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று இரவு காவற்துறை கைது செய்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நிலையில், காதல் தொடர்பில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Read More

மூதூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – மூதூர் வலய கல்வி பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த அல் மினா,அல் ஹிதாய,அல் ஹிலால்,அல் மினார், ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன் இன்று காலை 8.00 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலய கல்வி பணிப்பாளர் ஆசிரியர்களை அவமானப்டுத்தினார் எனக்கூறியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாடசாலைகளில் நடக்கும் பிழைகளை தட்டிக்கேட்டதனால் தமக்கு எதிராக தன்னால் அடையாளப்படுத்தபட்டவர்களே தமக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக…

Read More