போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய 1900 சாரதிகளுக்கு எதிராக அபராதம்
(UDHAYAM, COLOMBO) – போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்து 990 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணச்சீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டப்பணச்சீட்டுக்கு மேலதிகமாக போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான ஆலோசனை வகுப்புக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் கொழும்பு நகர் மற்றும் கொழும்பு நகருக்கு நுழையும் முதன்மை வீதிகளில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.