முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல என அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!
(UTV|KANDY)-நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (04) அக்குரணை 06ஆம் கட்டையில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த…