அரச முகாமைத்துவ சேவையில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வருடத்தில் இணைப்பு

(UDHAYAM, COLOMBO) – அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார். இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு…

Read More

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுகேகொட, கல்கிசை, கம்பஹா, களனி, பாணந்துறை முதலான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் பொலிஸாரும் இராணுவத்தினரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வார்கள்.

Read More

வரட்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – வரட்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த ஓர் நபருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More