உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் எந்த ஓர் நபருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *