இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது – மகிந்த ராஜபக்ஷ
(UDHAYAM, COLOMBO) – இனவாத ரீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அமுலாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிற நிலையிலேயே மகிந்த இதனை தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களுக்கு அமைய காவற்துறையினருக்கு அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது. இனவாத செயல்களை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லாமை காரணமாகவே, தமது அணியினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எனவும் மகிந்த…