வடமாகாண ஆளுநர் தலைமையில் முல்லைத்தீவு காணிப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்

UTV | COLOMBO – முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருபது காணி முறைப்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 12 பேர் விசாரணைக்கு சமூகமளித்திருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் சண்முகம் தவசீலன் தெரிவித்துள்ளார். இதில் 7 பேரின் காணிப்பிணக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 22 பேர் புதிதாக தங்களது காணி…

Read More

வடமாகாண சபையின் விசேட அமர்வு..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீனதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து இன்றையதினம் வடமாகாண சபையின் விசேட அமர்வில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் திகதி நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கடந்த மாதம் 19ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கையளிக்கப்பட்ட நிலையில், இதனை கடந்த 7ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் முன்வைத்தார்….

Read More

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ; விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண கௌரவ அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைபற்றிய விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்.. வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அமர்வுகளில் என்மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோது நான் அவை ஆதாரம் இல்லாத,அபாண்டமான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும், நான்கு கோடி அல்ல,நானூறுரூபா தன்னும் நான் நிதிஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதை நிரூபியுங்கள் என்றும் தெரிவித்திருந்தேன். குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு இப்போதும் அதுவாகவே இருக்கிறது. மக்கள் என்மீது…

Read More

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை சபையில்..

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு அறிக்கை எதிர்வரும் 14ம் திகதி சபையில் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. இந்த அறிக்கை இன்று முதலமைச்சரால் மாகாண சபையின் விசேட அமர்வில் முன்வைக்கப்பட்டது. பின்னர் விவாதத்துக்கு திகதி ஒதுக்குவது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களிடையே இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர், 14ம் திகதி அதனை விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

வடமாகாண விளையாட்டு போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடம்

(UDHAYAM, COLOMBO) – 017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது. ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), யூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(ஆண்கள்), துடுப்பாட்டம்(ஆண்கள்) போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும், 10 விளையாட்டுகளில் இடண்டாம் இடங்களையும், 9 விளையாட்டுகளில் மூன்றாம் இடங்களையும் கிளிநொச்சி…

Read More

சற்றுமுன் ஆரம்பமானது வடமாகாண ஊடப்பயிற்சி

(UDHAYAM, COLOMBO) – தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண ஊடக பயிற்சி  வேலைத்திட்டம் கிளிநொச்சி மகாதேவா  ஆச்சிரமத்தின் பொது  மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உத்தியோகத்தரும் தமிழ் அறிவிப்பாளருமான  சிவராசா  அவர்களின் தலமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமானது இவ் வேலைத்திட்டமானது  தொடர்ந்து நாளை மாலை வரை நடைபெற உள்ளதுடன்  வேலைத்திட்டத்தில் பிரதம விருந்தினராக  கிளிநொச்சி ஊடக அமையத்தின் தலைவர் திருலோகமூர்த்தியும்  வளவாளர்களாக  அறிவிப்பளர்களான ஏ.எம் .ஜெசீம் …

Read More