(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அமைச்சர்கள் மீனதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்து இன்றையதினம் வடமாகாண சபையின் விசேட அமர்வில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 27ம் திகதி நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
80 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கடந்த மாதம் 19ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கையளிக்கப்பட்ட நிலையில், இதனை கடந்த 7ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபையில் முன்வைத்தார்.
அன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி இன்று குறித்த அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகிறது.
இன்றையதினம் தம்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வடமாகாண அமைச்சர் பி.ஐங்கரநேசன் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்ததுடன், முதலமைச்சரின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதாகவும் கூறினார்.
அதேநேரம் இந்த விடயம் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் தன்னிலை விளக்கத்தை முன்வைப்பார்களாக இருந்தால், இதில் தீர்மானிக்கும் பொறுப்பை முதலமைச்சரிடம் பாரப்படுத்த சபை நடவடிக்கைகள் குழு தீர்மானித்திருப்பதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இதனை அடுத்து இந்த அறிக்கை குறித்து வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவருக்கு கருத்து வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஆனால் இதற்கு ஏனைய உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.