இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அழகுக்கலை நிபுணர்களுக்கு ஜனாதிபதி விருது

(UTV|COLOMBO):அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும்; நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.   அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத்துறையில் உள்ளவர்களை கௌரவிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும் . இத்துறையின் முன்னேற்றத்திற்காக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் 16 பேருக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.  …

Read More