இதுவரை கொரோனா வைரஸ் இல்லாத நாடுகள்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி 12ஆம் திகதி வரை சீனாவிற்கு வெளியே எந்த நாட்டிலும் பரவவில்லை ஆனால் அன்றைய நாளுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாகிவிட்டது.

தற்போது உலக நாடுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்க போராடி வருகின்றதுடன், நாளுக்கு நாள் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

ஏப்ரல் 2ஆம் திகதி வரை, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவலை ஆராய்ந்தால் 18 நாடுகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, காம்ரோஸ், க்ரிபாட்டி, லெசோட்டோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா, நவ்ரூ, வட கொரியா, பாலவ், சமெளவா, செளவ் டேம் மற்றும் பிரின்ஷிபி, சாலமன் தீவுகள், தென் சூடான், டஜிகிஸ்தான், டாங்கா, டர்க்மெனிஸ்டான், டுவாலு, ஏமன் மற்றும் வான்வாட்டு ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

உலகில் மிகக் குறைவான வருகையாளர்களைக் கொண்ட 10 இடங்களில் ஏழு இடங்களில் கொரோனா தொற்று இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *