ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை

(UTV|COLOMBO) சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார். இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.        

Read More

அமெரிக்க ராணுவ மந்திரி பாகிஸ்தான் வருகை

(UTV|AMERICA)-அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைமை மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், மேற்படி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார். அவர், அமெரிக்க ராணுவ மந்திரியாக பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும். தனது பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஜிம் மேட்டிஸ், ‘தாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். தங்கள் சொந்த நலனுக்காகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகவும்…

Read More

சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – சிங்கப்பூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணன் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவர்கள் நேற்றிரிவு கொழும்பை வந்தடைந்தனர். இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க தலைமையிலான குழுவினர்; வரவேற்றனர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி குழுவினர் கவனம் செலுத்துவர்.

Read More

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த சீன கப்பல்கள் நாடு திரும்பின

(UDHAYAM, COLOMBO) – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வருகை தந்த சீனக்கப்பல்கள் நாடு திரும்பின. கடந்தமாதம் 31ம் திகதி வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான ‘Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu ஆகிய கப்பல்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பின. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக 10 சிறிய படகுகள் மற்றும் ஐந்து மருத்துவ குழுக்களுடன் குறித்த கப்பல்களில் வருகை தந்த…

Read More

பாகிஸ்தான் 8 மாணவர்கள் இலங்கை வருகை

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து ஷாசியா ஷாகித் என்பவரின் தலைமையில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இன்று முதல் 28ம் திகதி வரை இவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர். இந்த மாணவர்கள் இலங்கையிலுள்ள பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷவ்றாஸ் அஹமத்கான் சிப்றாவையும் சந்தித்தனர். இந்த நிகழ்வு இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நிலையத்தில் இடம்பெற்றது. இவர்கள் கண்டி…

Read More

இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமரின் வருகை நாட்டிற்கு பல்வேறு வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.

Read More

மோடியின் வருகை காரணமாக இருநாட்டு உறவு மேலும் வலுப்பெறும் -மனோ

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர கட்சியின் அமைச்சரொருவர் இணை அமைச்சரவை பேச்சாளராக செயற்படுவது தொடர்பில் பிரச்சினை இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர ்இதனை தெரிவித்தார். மேலும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு  சிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் , இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக அமைச்சர ்தெரிவித்திருந்தார்.

Read More