வித்தியா படுகொலை வழக்கு – ‘விசாரணைமன்று’ அடிப்படையிலான 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

(UDHAYAM, COLOMBO) – கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. கடந்த 28ம் திகதி ஆரம்பமான இந்த விசாரணைமன்றில் 10 சாட்சியாளர்கள் சாட்சி வழங்கியுள்ள நிலையில், மேலும் 40 பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமான சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ம் திகதி வரையில் நடைபெறும். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான இந்த…

Read More

90 சதவிகித விசாரணைகள் நிறைவு

(UDHAYAM, COLOMBO) – கடந்த அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தற்போது 90 சதவிகிதம் நிறைவுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சக்தி மற்றும் சக்தி வலு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்தார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் பொருட்டு விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.  

Read More

அங்கொடை துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – அங்கொடை – முல்லேரியா – உடமுல்லை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சீ.சீ.டிவி கமெராவில் பதிவான காட்சிகளை கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த நிறுவனத்தின் உரிமையாளரிடம், அடையாளம் தெரியாத ஒருவர் கப்பம் பெற முயற்சித்துள்ளார். அதற்கு குறி;த்த நிறுவனத்தின் உரிமையாளர் இணக்கம் தெரிவிக்க மறுத்தமையினையடுத்து, உந்துருளியில் வகைத்தந்த இருவர் இந்த…

Read More