(UDHAYAM, COLOMBO) – அங்கொடை – முல்லேரியா – உடமுல்லை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சீ.சீ.டிவி கமெராவில் பதிவான காட்சிகளை கொண்டு சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளரிடம், அடையாளம் தெரியாத ஒருவர் கப்பம் பெற முயற்சித்துள்ளார்.
அதற்கு குறி;த்த நிறுவனத்தின் உரிமையாளர் இணக்கம் தெரிவிக்க மறுத்தமையினையடுத்து, உந்துருளியில் வகைத்தந்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மூலம் எருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.