தொடரும் விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – தேசிய டெங்கு ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் இராணுவத்தினர் ஒரு வார டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ம் திகதி ஆரம்பமான இந்த டெங்கு ஒழிப்பு நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிற்கு அருகாமையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மக்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்குளி பகுதியில் டெங்கு பரவாமலும் அதனை அடையாளம் கண்டு அழிக்க நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையிலும் இத்திட்டத்தில் 25 காவல்…

Read More

விஷேட டெங்கு ஒழிப்பு நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் டெங்கு ஒழிப்பு விஷேட நிகழ்வின் இரண்டாவது நாள் கொழும்பு, மஹவத்த பிரதேச பகுதிகளில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 40 குழுக்கள் கலந்து கொண்டனர். ஒரு குழுவில் 5 இராணுவ அங்கத்தவர்களும் பொலிஸ் அதிகாரி மற்றும் மக்கள் சுகாதார பரிசோதகர் உள்ளடங்குவார்கள். இதற்கு சமமாக கடுவெல பிலியந்தலை, ஹங்வெல்ல, ஹோமாகம மற்றும் கஹதுடுவ பிரதேசங்களை உள்ளடக்கி இராணுவ அங்கத்தவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். கடந்த…

Read More

கட்டார் ரியால் பரிமாற்றம் தொடர்பில் மத்திய வங்கி விஷேட அறிவித்தல்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் ரியாலை ஏற்கவேண்டாம் என எந்தவொரு வங்கிக்கும் அறிவிக்கவில்லை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியால் பரிமாற்றத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் குறிப்பிட்டளவு பணமே இவ்வாறு பரிமாற்ற வாய்ப்பாளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிகள், கட்டார் ரியாலை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட வைத்திய சேவையை வழங்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார நிலைமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முதல்கட்டமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More