தொடரும் விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – தேசிய டெங்கு ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் இராணுவத்தினர் ஒரு வார டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1ம் திகதி ஆரம்பமான இந்த டெங்கு ஒழிப்பு நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிற்கு அருகாமையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலய வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்குளி பகுதியில் டெங்கு பரவாமலும் அதனை அடையாளம் கண்டு அழிக்க நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையிலும் இத்திட்டத்தில் 25 காவல் துறையினர், 25 பொது சுகாதார பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 200 இராணுவ வீரர்கள் உள்ளடங்கலாக 25 குழுக்கள் செயற்பட்டுவருகின்றனர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது எதிர்வரும் சனிக்கிழமை (08) வரை முன்னெடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *