வெல்லம்பிடியவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

(UTV|COLOMBO)-வெல்லம்பிடியவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். ஹட்டன் – மஸ்கெலியாவில் இருந்து மரக்கறிகளை ஏற்றி கொழும்பு நோக்கி வந்த பாரவூர்தி ஒன்று வெல்லம்பிடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பின்னால் வந்த மற்றுமொரு பாரவூர்தி குறித்த பாரவூதியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பாரவூர்தியின் சாரதியே பலியானார். பலியானவர் மஸ்கெலியா – சாமிமலை பகுதியை சேர்ந்த, ஒரு வயது குழந்தையின் தந்தை என தெரியவந்துள்ளது.

Read More