(UTV|தென்னாபிரிக்கா) – இந்திய தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையிலான போட்டிகளின் போது ரசிகர்கள் வீரர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் செல்பி எடுத்துக் கொள்வதற்கும் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலேயே குறித்த இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியினருக்கு ரசிகர்களை தொடர்பு கொள்வது செல்பி எடுத்துக் கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடைமுறைகள் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளின் போது மாத்திரமின்றி ஐபிஎல் போட்டிகளின் போதும் காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்க வீரர்களிற்கு அவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளோம் என தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீரர்களினதும் அவர்களை சுற்றியுள்ளவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட விதிமுறைகளாக இவை காணப்படுகின்றன எனவும் கூறப்படுகின்றன.