மெல்போர்ன் நகரில் தீப்பரவல்! மூச்சுத்திணறலால் மக்கள் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் கழிவு சுத்தகிரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 100 வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தீப்பரவலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீப்பரவலால் ஏற்பட்ட புகை, 15 கிலோமீட்டர் வரை பரவியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த ஓர் நபருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More