ஹவாய் பகுதியில் வெடித்து சிதறிய கிலுயுயே எரிமலை
(UTV|HAWAI)-ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே எரிமலையில் நேற்று வெடிப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 6 மைல் உயரத்திற்கு புகை பரவியுள்ளது. மேலும் பல மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள 37 வீடுகள் சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது….