நயன்தாரா திரைப்படத்தில் ஹொங்கொங் கலைஞர்
(UDHAYAM, COLOMBO) – நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிக்காக ஹொங்கொங் கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெறவுள்ள சைக்கிள் சண்டைக் காட்சிக்காக இயக்குநர் அஜய்ஞானமுத்து, ஹொங்காங்கில் இருந்து உண்மையான சைக்கிள் ஸ்டண்ட் கலைஞரான லீ ஹான் யூ என்பவரை வரவழைத்துள்ளார். அதர்வா மற்றும் உள்ளூர் சண்டை நடிகர்களுக்கு லீ ஹான் யு,10 பயிற்சி அளித்து வருகிறார். இந்த சண்டைக் காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டு வருகிறன. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து…