பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் – 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – காபுலின் மேற்கு பகுதியில் உள்ள சியா பள்ளிவாசல் ஒன்றின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோன்பை முன்னிட்டு இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் உரிமைக் கோரவில்லை.

Read More

இந்தியாவில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்ட்சோர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடன்களில் இருந்து தங்களை விடுவிக்க வலியுறுத்தி, விவசாயிகளால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது அங்கு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Read More

BREAKING: மண் சரிவில் 6 பேர் பலி! 4 பேரைக் காணவில்லை – படங்கள்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை, புளத்சிங்கள, போகாவத்தை- தெல்பவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. இதேவேளை, புளத்சிங்கள கொபவக திவலகடகந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மாத்தறை தெனியாய – மொரவக கந்த மற்றும் களுத்துறை – புளத்சிங்கள – போகஹவத்த – தெல்பாவத்த பிரதேசங்களில்…

Read More

தமிழக கடற்றொழிலாளர்கள் 6 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து இலங்கை கடலோர கண்காணிப்பு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் படகு ஒன்றும் கடற்றொழில் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read More