அதிகளவிலான மரணத்திற்கு காரணம் வீதி விபத்துக்களே
(UDHAYAM, COLOMBO) -இளவயதினரைச் சேர்ந்த 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் இளைஞர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள். குறித்த இளைஞர்களின் மரணத்திற்காக பத்துக் காரணங்களின் பட்டியலை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறது. இதில் சுவாசக் கோளாறு, தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிக்கின்றன.