அமைச்சு மாற்றம் இடம்பெற்றால் ஐ.தே.க.யின் பிரபல 3 அமைச்சர்கள் வெளியே?

(UDHAYAM, COLOMBO) – அமைச்சர்கள் மாற்றமொன்று இடம்பெற்று அதில், தான் தற்பொழுது வகிக்கும் அமைச்சுப் பதவி மாற்றம் செய்யப்பட்டால், தன்னுடைய அமைச்சிலிருந்தும், தான் வகித்துவரும் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகி விடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்கள் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அவசர அமைச்சு மாற்றத்துக்கு தம்முடைய எதிர்ப்பை சிறிக்கொத்த தலைமையகத்தக்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். பிரதமரின் சீன விஜயத்தின் பின்னர் தமது தீர்மானம் குறித்து பேசவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கூட்டு எதிர்க்…

Read More

ரஷ்ய புற்றுநோய் மருந்த தரம் தொடர்பில் பிரச்சினை எழவில்லை – சுகாதார அமைச்சு

(UDHAYAM, COLOMBO) – புற்றுநோய் சிகிச்சைக்காக ரஷ்யாவில் இருந்து தருவிக்கப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மருந்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் வீல்பிரட் குமாரசிறி தெரிவித்தார். கடந்த 9 மாத காலப் பகுதியில் பெருமளவு நோயாளிகள் ரஷ்ய புற்றுநோய் மருந்தைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் கூறினார். அதேவேளை, தொற்றுநோய்களுடன்…

Read More

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு கையிருப்பை பராமரிக்க வேண்டி இவ்வாறு சதொசவின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி லங்கா சதொச விற்பனை நிலையங்களில் மற்றும் திறந்த சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More