உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை – டிரான்
(UTV | கொழும்பு) – பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பொலிஸ் திணைக்களம் தற்போது அரசியல் தலையீடற்ற நிறுவனமாக இயங்குகின்றது என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…