வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள்!

(UTV | கொழும்பு) –

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலயம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் செயற்படுத்தலின் கீழ் கிராமிய உற்பத்திகளை பொதியிடும் நிலையம் மற்றும் கிராமிய உற்பத்திகளுக்கான கண்காட்சியும் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவர் வினோஜ்குமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வின் கௌரவ அதிதியாக பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளிநாட்டுத் திட்டச் செயலாளர் புவனேஸ்வரி சபாரத்தினம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிகா, நிஸ்கோ பணிப்பாளர் எஸ். சிறிவர்த்தன, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல். முபாரக் அலி, கிழக்கு மாகாண சொற்பொழிவாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் யுவஸ்ரீ கலா பாரதி சிவஸ்ரீ க.வி. பிரமீன்சர்மா, சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் எஸ். ஜெயச்சந்திரன், அகோரமாரியம்மன் ஆலயத்தின் செயலாளர் அழகுராஜன், உபதலைவர் மோகன், கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் இளங்கோபன்,
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ. எல். இஸ்மாயில், மட்டக்களப்பு தரவை – 2 கிராம சேவகர் எஸ்.எம். பரீட், சமூர்த்தி உத்தியோகத்தர் சித்தி ஹிதாயா மற்றும் நியூ சன் ஸ்டார் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிராமிய இளைஞர் உற்பத்திகளைப் பொதியிடும் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் 23 இளைஞர்களினால் செய்யப்பட்ட சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் வைத்து எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்களையும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல நாடுகளில் சமூக மற்றும் சமய சேவைகளைச் செய்துவரும் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளிநாட்டுத் திட்டச் செயலாளர் புவனேஸ்வரி சபாரத்தினம் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆசிய நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக தடைசெய்யப்பட்டு வருகின்றன. இதனால் சூழல் நேயமிக்க பயன்பாட்டுப் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்புக்கள் உள்ளன. இப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி, சூழல் நேயமிக்க பயன்பாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் கிராமத்துக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றன. இதற்கான நிதி உதவிகளை பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *