News Editor Team

பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் சட்டவிரோதமானது, இதன் காரணமாக பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பயணிகள் வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த கட்டண குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதற்கமைய முதல் கிலோமீற்றருக்கான 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 90 ரூபா அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தேயிலைத் தோட்ட உரிமையாளர் பலி.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Read More

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனை தொடர்ந்து கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு செல்லும் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள், திருகோணமலை மற்றும் அங்கிருந்து மட்டக்களப்பில் இருந்து ரம்புக்கனைக்கு செல்லும் இரவு அஞ்சல் புகையிரதம் உட்பட பல ரயில்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட 14 பிரச்சினைகளை முன்வைத்து…

Read More

இனவாதம், மதவாதங்களை கைவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைப்போம் – சஜித்

நாடு வீழ்ந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டும். அவ்வாறு மீள வேண்டுமானால் முழு நாடும் ஒன்றுபட்டால்தான் இது முடியும். சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் என பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் சாதி, இனம், மதம் என பிரிந்து செயல்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவது கடினமாகும். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 298 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் அல்…

Read More

அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லும் ‘விஷன் 2030’ ஜனாதிபதிக்கு கையளிப்பு.

2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கையை நிலையான மற்றும் முழுமையான அபிவிருத்தியை நோக்கி வழிநடத்தும் வகையில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான கொள்கைகளை உள்ளடக்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. ‘விஷன் 2030’ ஊடாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் இலங்கை எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்காக அனைத்து துறைகளிலும் கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் குறித்தும் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் நன்மைகள்…

Read More

A/L விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு.

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினத்திற்கு பின்னர் எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான காலம் பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள்…

Read More

தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் நிறைவேறியது.

இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து குழுநிலை விவாதத்தில் சில திருத்தங்கள் இணைக்கப்பட்டன. கடந்த மே மாதம் 10ம் திகதி குறித்த சட்டமூலத்தை தொழில்நுட்ப அமைச்சர் சபையில் முன்வைத்திருந்தார். 28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்புகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு துறையில் அதிக போட்டி மற்றும் நியாயமான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைகளுக்கு இந்த திருத்தங்கள் ஊடாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளன.

Read More

தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் பின்வாங்க மாட்டேன் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார். இது குறித்து பேசிய அதிபர் பைடன், “டொனால்ட் டிரம்ப்-ஐ தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன். ஊடகம்…

Read More

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத் தரம் அல்லாத அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கும், அவர்கள் அனைவருக்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தும் வகையில் விசேட பாராட்டுச் சான்றிதழொன்றை வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (09) முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More