தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் பின்வாங்க மாட்டேன் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அதிபர் பைடன், “டொனால்ட் டிரம்ப்-ஐ தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன்.

ஊடகம் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளேன்.

இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டே இருப்பேன். டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்துவேன்.”

“ஜனநாயக கட்சி சார்பில் இறுதி வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் 42 நாட்களும், பொது தேர்தல் துவங்க 119 நாட்களும் உள்ளன.

எதிர்காலம் பற்றிய தெளிவின்மை மற்றும் தீர்மானங்களில் பலவீனம் ஏற்பட்டால் அது டிரம்ப்-க்கு சாதகமாக மாறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்த தருணத்தில் நாம் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கட்சியாக டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *