News Editor Team

1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை  வழங்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இலங்கை தோட்ட அதிகார சபையின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இன்று (9) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. தோட்டத் தொழிலாளர்கள் அலுவலகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டபோது, ​​தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், தண்ணீர் பீச்சு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. அதன் பின்னர், கொழும்பு 7 இல் அமைந்துள்ள…

Read More

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த சஜித்

ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியர்களின் குறிக்கோளாக இருந்தாலும், அவர்களின் ஓய்வூதியம் முறையாக கிடைக்காததாலும், அரசின் பல்வேறு கொள்கைகளாலும், ஓய்வூதியக்காரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தொழில் ரீதியாக பேரம் பேச முடியாத ஒரு குழுவாக இருக்கும் ஓய்வூதியம் பெருநர்களின் குறைபாடுகளை உணர்ந்து செயல்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து…

Read More

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

பதுளை – மஹியங்கனை வீதியில் பதுளை, மெடிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (09) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அதிவேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களை செலுத்திச் சென்ற இருவரும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

Read More

கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்.

சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் வழியாக கடத்திய ஐந்து சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பல நாள் மீன்பிடி படகைப் பயன்படுத்தி இவர்கள் இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கடத்தல் தொடர்பில் கடற்படை புலனாய்வு பிரிவினரின் நீண்டகால விசாரணையின் பலனாக, சுரக்ஷா கப்பலினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் தென்கடலில் பயணித்த இந்த பலநாள் மீன்பிடி படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த பலநாள் மீன்ப்பிடி படகில்…

Read More

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.

முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நிவித்திகலை, வட்டாபொத , யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு  அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் இருந்து நேற்று (08) நிவித்திகல பொலிஸார் சடலத்தை கண்டு பிடித்துள்ளனர். 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இவர் வட்டாபொத, யொஹூன் கிராமம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இறந்தவரின் தாயார் வட்டாபொத விகாரைக்கு அருகில் விற்பனை நிலையம்…

Read More

அலி சப்ரி ரஹீம் MP யை உடனடியாக கைது செய்ய உத்தரவு.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின் புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்தபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதற்கு முன்னரும், பொறுப்புவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என…

Read More

சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமையேற்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரன, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய…

Read More

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு

அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுருகிரிய பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப்…

Read More

இலவச டேட்டாவைப் பெற முடியும் என வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் மொபைல் போன் தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்தார். குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண குறுஞ்செய்தி மூலம் இலவச டேட்டாவைப் பெற முடியும் என செய்தி இந்நாட்களில் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வாறான…

Read More

சம்பந்தனுடைய வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடைய இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது நிலையில் இருக்கின்ற சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 02.07.2024 அன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் கூடுகின்ற பாராளுமன்ற அமர்வின்போது அவர் சபாநாயகரின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் மேற்கொள்ளவுள்ளார்.

Read More