மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதி தனது திருடர்களைக் கொண்டு அரசியலமைப்பிலுள்ள இடைவெளிகளைத் தேடி வருகிறார்.
இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய தருணமாகும். அரசியலமைப்பில் உள்ள இடைவெளிகளைத் தேடிவருவது தற்போதைய ஆட்சியாளர்களினதும் அவரது அடியாட்களினதும் தேசிய பணியாக மாறியுள்ளது. மக்கள் ஆணையும், மக்களின் நம்பிக்கையும் அங்கீகாரமும் இன்றி வாக்குகளால் வெற்றி பெற முடியாத நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, அரசியலமைப்பில் ஓட்டைகளைத் தேடும் நபராக மாறியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்பவோ அபிவிருத்தி செய்யவோ முடியாது. நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான விருப்பமும் அவர்களிடம் இல்லை. அரசியலமைப்பில் உள்ள இடைவெளிகளில்…