Chief Editor

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கொழும்பு கிராண்ட்பாஸ் – பர்கியூசன் வீதி, முவதொர உயன பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பெண்ணிடம் மூன்று கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் 9 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More

இவ்வருட இறுதிக்குள் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு இறுதிக்கு முன்னர் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படுமென நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தறை, ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுங்சாலை, கடவத்த – கெரவலபிட்டிய அதிவேக வீதி, மற்றும் மீறிகம – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகளே இவ்வாறு பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளன. கடவத்த – கெரவலப்பிட்டிய வீதி திறக்கப்பட்ட பின்னர் கட்டுநாயக்கவில்…

Read More

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

UPDATE – துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) –  அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் 2 ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் டெக்ஸாசில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயதடைந்திருந்தனர். இந்த பதட்டம் அடங்குவதற்குள் ஓஹியோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த நபரும் இறந்து விட்டதாக அந்நாட்டு…

Read More

பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை பகுதியில் போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) – கடுவலை – நவகமுவ தேவாலயத்தின் வருடாந்த பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை சந்தி மற்றும் கடுவலை வெலே சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே, பிற்பகல் 1.30வரையான காலப்பகுதியில் குறித்த வீதியின் ஊடாக பயணிக்க உள்ள சாரதிகள், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர். இதற்கமைய, கொழும்பிலிருந்து 143 ஆம் இலக்க மார்க்கத்தில் ஹங்வெல்ல – கொழும்பு வீதியில் பயணிக்கும் வாகனங்கள், வெலே சந்திவரை பயணித்து, ஹங்வெல்ல…

Read More

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் “ஜனநாயக தேசிய முன்னணி” அமைக்கும் நிகழ்வு இன்று(04) இடம்பெறும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா

(UTVNEWS | COLOMBO) – தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – வஸ்கடுவ பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு உள்ளன. சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04)

(UTVNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04) காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்களுக்கு 2995 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More