பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை பகுதியில் போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) – கடுவலை – நவகமுவ தேவாலயத்தின் வருடாந்த பெரஹர உற்சவத்தை முன்னிட்டு, கடுவலை சந்தி மற்றும் கடுவலை வெலே சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே, பிற்பகல் 1.30வரையான காலப்பகுதியில் குறித்த வீதியின் ஊடாக பயணிக்க உள்ள சாரதிகள், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பிலிருந்து 143 ஆம் இலக்க மார்க்கத்தில் ஹங்வெல்ல – கொழும்பு வீதியில் பயணிக்கும் வாகனங்கள், வெலே சந்திவரை பயணித்து, ஹங்வெல்ல நோக்கி பயணிக்க முடியும்.

இதேநேரம், ஹங்வெல்ல முதல் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கடுவலை – வெலே சந்தியில் இடது பக்கமாக திரும்பி 697 மார்க்கத்தில் அத்துருகிரிய வரை பயணித்து, வலது பக்கமாக திரும்பி மாலபே ஊடாக கடுவலைக்கு பயணிக்க முடியும் என பொலிசார் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *