ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகமே விசேட உரை!
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகம் என்று எதிரணிகள் சாடியுள்ளன.ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று (26) ஆற்றவுள்ள உரையில் இந்த அறிவிப்பை விடுப்பார் என்று ஆளுங்கட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையிலே எதிரணிகள் இவ்வாறு சாடியுள்ளன. களனி ஆற்றிலிருந்து நாகம் வருகின்றதெனக்கூறி கோட்டாபய ராஜபக்ச வாக்குவேட்டை நடத்திய நாடகத்தின் 2 ஆம் பாகமாகவே ஜனாதிபதியின் அறிவிப்பு அமையும் எனவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய…