மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!

இந்திய மீனவர்கள் குழுவை கைது செய்ய சென்ற போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக இழுவை படகு மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த குழுவினரை கைது செய்ய சென்ற போது  கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.