Chief Editor

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

“சர்வசன வாக்கெடுப்பை நடத்தி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தாமே ஆட்சிசெய்ய முடியுமா என்று பார்க்க பட்டத்தைப் பறக்கவிட்டுப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அதன் பிரகாரம் ஐந்து வருட ஆட்சி நிறைவின் பின்னர் கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொழும்பு ஆயர் மெக்ஸ்வெல் சில்வாவால் எழுதப்பட்ட ‘இலங்கையில் கிறிஸ்தவ தர்மத்தைக் கற்பிப்பதற்கான சவால்கள்’ என்ற தலைப்பிலான நூலின்…

Read More

இந்தியாவில் கைதான 4 இலங்கையர்களின் விசாரணைகள் நிறைவு : பயங்கரவாதம் குறித்து ஆதாரமில்லை

கொழும்பு ‍ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மையப்ப‌டுத்தி, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்ப‌டும் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்…

Read More

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.என்.ஜே.டி. அல்விஸ் தலைமையிலான இந்தக் குழுவில், சக உறுப்பினர்களாக இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரநிலை அதிகாரியான கே.என.கே. சோமரத்ன…

Read More

தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை – சுமந்திரன்

தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை. இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழரசு கட்சி பிரசாரம் செய்யும் என அந்தக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் தரப்பினரின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் “ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” என்ற தலைப்பில்  ஞாயிற்றுக்கிழமை (09)  நடத்தப்பட்ட அரசியல் கருத்துக் களத்தில் உரையாற்றியபோதே சுமந்திரன் எம். பி. இவ்வாறு கூறினார். அவர் தனது உரையில், “பொதுமக்களால்…

Read More

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா (51) மற்றும் 9 பேருடன் திங்கட்கிழமை காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடாரில் இருந்து வெளியேறியதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின்…

Read More

சிறுவர்களின் தோலில் பல்வேறு உபாதைகள் – பெற்றோர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிறுவர்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப சந்தையில் கிடைக்கும் தரக்குறைவான சவர்க்காரர்களை பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கொள்வனவு செய்கின்றனர். விலைவாசி குறிவைத்து சில குழுக்கள் நுகர்வோரை ஏமாற்றி தரமற்ற சவர்க்காரர்களை சந்தையில் சேர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தரநிலைகள் பணியகத்தால் சான்றளிக்கப்பட்ட குழந்தை சவர்க்காரர்களை…

Read More

20 ரயில் சேவைகள் இன்றும் ரத்து..!

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறாயினும், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 05 தொழிற்சங்கங்களுக்கு இன்று தமது பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக…

Read More

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். பெரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு சுற்றுகளாக வாக்கப்பதிவு நடத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியா பறந்தார் ரணில்!

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இன்று (09) மாலை புதுடெல்லி தலைநகரில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 44 நாட்கள் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர…

Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ஜனாதிபதி ரணில் திட்டம்!

எதிர்வரும் ஜுலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜுலை மாத முதல் வாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை ஜனாதிபதி ரணில் தீர்மானிக்க உள்ளதாகத் கூறியுள்ளார். சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ரணில் பின்னடைவை…

Read More