போதிய வைத்தியர்கள் இன்மை; வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலை – GMOA அச்சம்
போதிய வைத்தியர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது. உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்புக்குத் தேவையான அளவுக்கு வைத்தியர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமால்…