Chief Editor

வீடுகளை புதுபித்து தறுமாறு எம்பிக்கள் கோரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் வசதிகள் குறைவாக உள்ளதால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அமைச்சர்கள் சிலர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் முறைப்பாடு செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாாகவும் மழை பெய்யக்கூடிய நாட்களில் சில வீடுகளில் நீர் வழிவதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். மாதிவெலவில் உள்ள அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தங்க போதுமான இடவசதி இல்லாமை…

Read More

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனம், ரக்பி சங்கம், மோட்டார் வாகன சம்மேளனம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகிய சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவுகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மேலதிக பணிகளை முன்னெடுப்பதற்கும், அது தொடர்பான தேர்தலை நடத்துவதற்கும் உரிய…

Read More

குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல்

 இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை குடியுரிமையை கைவிட்டவர்கள் உள்ளிட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கை துணையாளர்கள் ஆகியோர் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்வதற்கான புதிய விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நிரந்தர வதிவிட வீசா உத்தரவு என இந்த வர்த்தமானி அறிவித்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள், குடியுரிமை சட்டத்தின் 19, 20…

Read More

கொழும்பிலிருந்து வந்த பஸ்ஸை பயனிகளுடன் கடத்தி, மயானத்திற்கு அருகில் விட்ட நபர்!

கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது, ​​குடிபோதையில் நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி, அதை இயக்கி ஓட்ட ஆரம்பித்ததாகவும், மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் கூறப்படுகிறது.   கொழும்பு மற்றும் திருகோணமலை மூதூருக்கு…

Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறும் – பிரதமர்

ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்புக்கு அமைவாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்ட திகதியிலும் நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொத செயளாலர் முன்வைத்த கருத்தால் நேற்று இலங்கை அரசியல் கட்சிகளிடைய பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது இந்நிலை தொடர்பில் இந்நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

ஐ.எஸ் விவகாரம்: பொய் அறிவிப்பு செய்த விரிவுரையாளர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிவிப்பொன்றை வெளியிட்ட வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

Read More

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு…!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடைக்காலத் தடையுத்தரவை ஜூன் 12 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தவறாக வழிநடாத்தும் சுமந்திரன்: விக்னேஸ்வரன்

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்துப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் என்ற போர்வையில் சுமந்திரன் எம்.பி. ஏற்பாடு செய்துள்ள நிகழ்வானது திசை திருப்பும் செயற்பாடு என்பதுடன் தவறான வழிமுறையும் ஆகும். தமிழரசுக் கட்சியைத் தனது கைப்பொம்மையாக மாற்ற சுமந்திரன் நினைக்கக் கூடாது.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் குறித்து சுமந்திரன் எம்.பி. அடுத்த…

Read More

பலஸ்தீனுக்கான உலக நாடுகளின் ஆதரவு: சிக்கலில் இஸ்ரேல் பிரதமர்

காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதுபோல் அயல்ர்லாந்தும் பலஸ்தீன் தனி நாடு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியுள்ளது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது. ஆனால், இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசாவில் போர் ஏற்படத் தொடங்கிய பிறகு நிலைமை மாற…

Read More

பாலித ரங்கே பண்டாரவின் கருத்து : அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல – நவீன் திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் கருத்துக்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல்களை ஒத்தி வைப்பது பொருத்தமற்றது எனவும் அவ்வாறான தீர்மானம் கட்சிக்கு நல்லதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்களை ஒத்தி வைத்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பில் கட்சிக்குள் பேசப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மற்றும்…

Read More