வீடுகளை புதுபித்து தறுமாறு எம்பிக்கள் கோரிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் வசதிகள் குறைவாக உள்ளதால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அமைச்சர்கள் சிலர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதிவெலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாாகவும் மழை பெய்யக்கூடிய நாட்களில் சில வீடுகளில் நீர் வழிவதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாதிவெலவில் உள்ள அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் தங்க போதுமான இடவசதி இல்லாமை காரணமாக குறித்த வீடுகளை புதுப்பித்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பெரும்பாலான அமைச்சர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த வீட்டுத்தொகுதியில் காணப்படும் குறைபாடுகளை வடிவமைத்து தருவதாக பொறியியலாளர்களுக்கு அறிவுறுத்தப்டபட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். 

மேலும், இது தொடர்பில் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த புனரமைப்பு பணிகளுக்காக இதுவரையில் நிதி ஒதுக்கப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *