Chief Editor

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அரச பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஜூன் 24ஆம் திகதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்று புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Read More

கல்விசாரா ஊழியர்கள் சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில்…!

நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளையும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இன்று இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார். இதேவேளை,…

Read More

காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் ஜனாதிபதி ரணில்! காசோலையும் கையளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு இன்று விஜயம் செய்தார். இதன் போது பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற துஆ பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைமுன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அலி சாஹீர் மௌலானா ஜனாதிபதியின்…

Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  ஐக்கிய இராச்சியத்தின் “தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்” தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான இந்த ஆணையம், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றமாகும்

Read More

“கிழக்கிலிருந்து சிங்கள மக்களை விரட்ட திட்டம்” அம்பிட்டிய தேரர்

கிழக்கு மாகணத்தில் உள்ள சிங்கள மக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு (Batticoloa) மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார். சிங்கள மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக பொறுப்புடன் செயல்படுவதாகவும், அவர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு சென்றுள்ளார், இந்த இரண்டு நாள் பயணத்தின் போது பல நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். எனினும், அவரது…

Read More

திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்: ஜனாதிபதி ரணில்

நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று…

Read More

ஜனாதிபதி தேர்தலில், ரணிலுக்கே ஆதரவு!ஜனாதிபதி முன்னிலையில் பிள்ளையானின் அறிவிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதாக அந்தக் கட்சித் தலைவர் உறுதியளித்தார்.

Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்து நேற்று (19) இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

வெளிநாட்டுக்குச் செல்லும், இலங்கைகளுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

இந்த நாட்களில் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட விசாரணை பணியகம் தனது விசாரணை நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள பணியகத்தின் பிரதான அலுவலகத்திற்கு மேலதிகமாக, ஹாலியெல்ல, இரத்தினபுரி, தங்காலை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாகாண அலுவலகங்களிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இதன்படி…

Read More

வீரமுனை நுழைவாயில் விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

பாறுக் ஷிஹான் வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர். வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டை இனவன்முறையினை…

Read More