உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்
(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. இது குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இதேநேரம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை புகைப்படம் எடுப்பதற்கும் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது…