உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளை இரகசியமான முறையில் மேற்கொள்ள தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இது குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், புலனாய்வுத்துறை அதிகாரிகளை புகைப்படம் எடுப்பதற்கும் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி, அரச புலனாய்வு சேவை பிரதானி, சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரட்ன மற்றும் அதன் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசசேகர ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.

அதேநேரம், காவல்துறை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் காவல்துறை பரிசோதகரான தரங்க பத்திரண ஆகியோரும் எதிர்வரும் 24 ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *