வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளார். அவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Read More

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்

  (UDHAYAM, PAPUA NEW GUINEA) – பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தென் கடற்பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கன்ரியன் பிரதேசத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் எபிட்டின் கடற்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Read More

உணவு ஒவ்வாமையால் பல மாணவர்கள் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாத்தறை பிரதேசத்தில் 25 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்றுள்ள இடைநடுவே நேற்று இரவு இந்த நிலை ஏற்பட்டு தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 15 பேர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை போச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மாணவர்கள் உண்ட உணவு விஷமானதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை இன்று மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா முன் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு…

Read More

வடக்கு முஸ்லிம்களுக்காக பரிந்து பேசும் புத்தி ஜீவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

(UDHAYAM, COLOMBO) – வில்பத்தை  முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கசசலுக்கு மத்தியிலேயே இதன் உண்மை நிலையையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்க தென கைத தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “மரங்களில் கருணை காட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இன்று( 27) காலை மறிச்சிக்கட்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பயன் தரும் மரங்கள் நடம் திட்டத்தின்  போதே அமைச்சர் இவ்வாறு…

Read More

மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

(UDHAYAM, COLOMBO) – மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரம் – மீண்டும் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை பிரகடனப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் மார்ச் மாதம் 29ம் திகதி முதல் ஏப்பிரல் 4ம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்ப்படுத்தப்படும் என்று டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, இரத்தினபுரி…

Read More

எடின்பரோ பிரபுக்கள் சர்வதேச விருதுவிழா பிரதமர் தலைமையில் இன்று

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டுக்கான எடின்பரோ பிரபுக்கள் சர்வதேச விருதுவிழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் எடின்பரோ பிரபுவான இளவரசர் பிலிப்பின் யோசனைக்கு அமைய 1956ஆம் ஆண்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உலகின் எந்தவொரு நாட்டிலும் 14 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள்…

Read More

அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் சதுர்தா வருஷ பூர்த்தி விழா

(UDHAYAM, COLOMBO) – கொட்டகலை அகில இலங்கை இந்து குருமார் சங்கம் ஒழுங்கு செய்துள்ள சதுர்தா வருஷ பூர்த்தி விழா நடைபெற்றது. அகில இலங்கை இந்து குருமார் சங்கத்த்தின் செயலாளர் சிவஸ்ரீ ச.ஸ்கந்தராஜாவின் ஏற்பாட்டில் கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலய கலாசார மண்டத்தில் நேற்று காலை இடம்பெற்றது. இந்த சதுர்மத வருஷ பூர்த்தி விழாவில் விநாயகர் வழிபாடு, குரு வந்தனம், கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா வேத பாடசாலை மாணவர்களின் காயத்திரி ஜெயம், அறநெறி பாடசாலை மாணவர்களின்,…

Read More

கொழும்பு – அவிஸாவளை பாதையில் கடும் வாகன நெரிசல்

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு- அவிஸாவளை பாதையில் மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

மழையுடன் கூடிய காலநிலை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு வடமத்திய கிழக்கு வடமேற்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் நண்பகல் 2.00 மணியின் பின்னர் காணப்படும். ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வழியான கடற்கரையோரத்தின் சில பிரதேசங்களின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்…

Read More