(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளார்.
அவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.