வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த காலநிலை நாளை வரை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆகாயம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை கிழக்கு ,வடக்கு ,வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டகங்களிலும் எதிர்பார்க்கப்பட்டுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் நண்பகள் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது…

Read More

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தண்ணீர் பவுசர்களைப் பெற்றுக்கொடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்த தண்ணீர் பவுசர்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 25 பவுசர்கள் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. வரட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 83 பிரதேச…

Read More

ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவின் புதிய குடிவரவு சட்டத்தின் கீழ் ஈராக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அவர் விடுத்திருந்த குடிவரவு சட்ட நிறைவேற்று உத்தரவில் ஈராக் உள்ளிட்ட 7 நாடுகளின் அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த உத்தரவு சட்டச் சிக்கலால் தடைக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் அவர் புதிய குடிவரவு நிறைவேற்று உத்தரவை இன்று அறிவிக்கவுள்ளார். இந்த உத்தரவின்…

Read More

தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கத்தவறியவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு  எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு  தெரிவித்துள்ளதாவது: சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் என்பனவற்றைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சட்ட நடவடிக்கைகளின்…

Read More

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படுகிறது – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – தமிழ் முற்போக்கு கூட்டணியை கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (28.02.2017) ராஜகிரியவில்  அமைந்துள்ள தலைமை தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித்தலைவர் பழனி திகாம்பரம், நிதிச் செயலாளர் எம்.திலகராஜா, செயலாளர் லோரன்ஸ், மற்றும் கூட்டணியின் பிரதிப்பொதுச்செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு…

Read More

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு கையிருப்பை பராமரிக்க வேண்டி இவ்வாறு சதொசவின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி லங்கா சதொச விற்பனை நிலையங்களில் மற்றும் திறந்த சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

எகிப்து பிரஜையொருவர் கைது!!

(UDHAYAM, COLOMBO) – முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள்

(UDHAYAM, COLOMBO) – கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் வழக்கு தொடர்பில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மாத்தறையில்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் இம்மாதம் 8 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார; அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவிததார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார இந்த விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர்…

Read More

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்ய விசேட சுற்றுநிருபம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக வெளிநபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன.னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தடையாக  அமைந்திருப்பதாக  பெற்றோர் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்திருந்தனர். இந்த…

Read More